இப்படை வெல்லும் படத்திற்கு பிறகு உதயநிதியின் நம்பிக்கை நிமிர் படம். பிரியதர்சன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன், நமிதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி நடிக்கும் ‘நிமிர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இப்போது படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

‘மகேஷின்டெ பிரதிகாரம்’ என்ற மலையாள படத்தின் ரீ-மேக்கான இப்படத்திற்கு தர்புகா சிவா மற்றும் அஜனீஷ் லோக்நாத் இருவரும் இசை அமைக்கிறார்கள்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் விரைவில் வெளியாகவிருக்கின்றன.
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாf உள்ள நிமிர் படத்தில் இடம் பெறும் ‘நெஞ்சில் மாமழை…’ என்று துவங்கும் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுகிறார். அடுத்த மாதம் ‘நிமிர்’ படம் வெளியாகிறது.



Leave A Comment
You must be logged in to post a comment.