‘சீயான் 60’ படத்தில் இணைந்த பிரபல நடிகை!

சியான் விக்ரம் நடிக்கவிருக்கும் 60வது திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே

மேலும் இந்த படத்தில் நடிகை சிம்ரன் இணைந்தார் என்ற செய்தி சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தற்போது இந்த படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை இணைந்து உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

’சீயான் 60’ படத்தை தயாரித்து வரும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் சற்றுமுன் இந்த படத்தில் வாணிபோஜன் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இவர் அனேகமாக துருவ் விக்ரம் ஜோடியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிம்ரன், வாணிபோஜனை அடுத்து இந்த படத்தில் இன்னும் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் அவ்வப்போது வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே வாணிபோஜன் தமிழில் ‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘கேசினோ’, தாழ் திறவா மற்றும் 2டி நிறுவனம் தயாரிக்கும் ஒரு திரைப்படம் ஆகிய படங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

after-simran-vanibojan-join-in-vikram-next

Actress Sai Pallavi PhotoShoot Video