குளோபல் இன்போடெய்ன்மெண்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கீ’.
செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காலீஸ் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் ஜீவா – நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

அனைகா சோதி, ஆர்.ஜே.பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
விஷால் சந்திர சேகர் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு அனிஷ் தருண் குமார் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.
காமெடி கலந்த குடும்பப் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் சமீபத்தில் தணிக்கைக்கு அனுப்பப்பட்டிருந்தது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். தணிக்கை குழு சான்றிதழ் கிடைத்ததை அடுத்து படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி படம் ரிலீசாக இருக்கிறது.
படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது



Leave A Comment
You must be logged in to post a comment.