மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க உட்பட பல படங்களை தயாரித்த இயக்குநர் பாண்டிராஜ், தனது பசங்க புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் புதிய படத்தை தயாரித்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.

எம்.எஸ்.ராஜ் என்பவர் எழுதி இயக்கும் இந்தப் படத்திற்கு மெரினா புரட்சி என்று பெயரிடப்பட்டுள்ளது. தலைப்புக்கு ஏற்ப இந்த படம் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் ஜல்லிக்கட்டை மையப்படுத்திய படமாக உருவாகி இருக்கிறது.
இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் இடம் பெற்றுள்ள கலாசாரத்தை காப்பாற்ற ஒரு போராட்டம் என்ற டேக் லைனும் இதை உறுதிப்படுத்துகிறது.
இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவலைகளை வெளியிடவில்லை. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், அல்ரூபியான் இசை அமைக்கிறார், படத்தொகுப்பை தீபக் செய்கிறார் என்பது போன்ற தகவல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.



Leave A Comment
You must be logged in to post a comment.