7 வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற 100% லவ் என்ற படம் தற்போது தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.

நாக சைதன்யா நடித்த கேரக்டரில் ஜி.வி.பிரகாசும், தமன்னா நடித்த கேரக்டரில் அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தின் மூலம் புகழ் பெற்ற ஷாலினி பாண்டேவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர நாசர், ஜெயசித்ரா, லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகிபாபு, சதீஷ், மனோபால உள்பட பலர் நடிக்கிறார்கள்.
எம்.எம்.சந்திரமவுலி இயக்குகிறார், கணேஷ் ராஜவேலு ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். தற்போது படத்தின் 90 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் ஒரு பாடல்காட்சியும், கிளைமாக்ஸ் காட்சியும் மட்டுமே படமாக்கப்பட வேண்டியது இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள நாச்சியார் படத்திற்கு பிறகு இந்தப் படம் வெளிவரும் என்று தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை படத்தை தயாரிக்கும் கிரியேட்டிவ் சினிமா, என்.ஜே.எண்டர்டயின்மெண்ட் நிறுவனத்தார் செய்து வருகிறார்கள்.



Leave A Comment
You must be logged in to post a comment.