விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘மெர்சல்’. இப்படத்தில் எ.ஆர்.ரஹ்மான் இசையில் விவேக் எழுதிய அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்தன. அதிலும் குறிப்பாக ‘ஆளப் போறான் தமிழன்’ என்ற பாடல் விஜய் ரசிகர்ளைப் பெரிதும் கவர்ந்தது.

 

அப்பாடலின் லிரிக் வீடியோ முதன் முதலில் யு டியூபில் வெளியிடப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான அந்தப் பாடல் ஆறு மாதங்களில் 4 கோடிக்கும் அதிகமான பார்வைகளை யு டியூபில் பெற்று சாதனை படைத்துள்ளது. யு டியூபில் முதல் முறையாக ஒரு தமிழ்ப் படப் பாடலின் லிரிக் வீடியோ 4 கோடி பார்வைகளைக் கடந்திருப்பது இதுவே முதல் முறை.

‘ஆளப் போறான் தமிழன்’ பாடல் வீடியோ 2 கோடி பார்வைகளை ஏற்கனெவே கடந்துள்ளது. இவை இரண்டையும் சேர்த்தால் ‘ஆளப் போறான் தமிழன்’ பாடல் மொத்தமாக 6 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

இருப்பினும் தனுஷ் நடித்து வெளிவந்த ‘மாரி’ படத்தின் ‘டானு டானு’ பாடல் வீடியோவின் எண்ணிக்கையை ‘மெர்சல்’ படத்தின் ‘ஆளப் போறான் தமிழன்’ இன்னும் முறியடிக்கவில்லை. ‘டானு டானு’ படத்தின் பாடல், லிரிக் வீடியோ இரண்டும் சேர்த்து 6 கோடியே 33 லட்சம் பார்வைகள் உள்ளன. ஆனால், ‘ஆளப் போறான் தமிழன் பாடலுக்கு 6 கோடியே 19 லட்சம் பார்வைகள் உள்ளன. சீக்கிரமே ‘டானு டானு’ பாடலை ‘ஆளப் போறான் தமிழன்’ முறியடிக்க வாய்ப்புள்ளது.