ராஜமவுலி இயக்கத்தில் 2017-ம் ஆண்டு ஏப்ரலில் வெளியான படம் பாகுபலி-2. ரூ. 1700 கோடி வசூலித்து இந்திய அளவில் அதிகம் வசூலித்த படம் என்ற இடத்தை பிடித்தது.

அதோடு, இந்த படத்தை கடந்த டிசம்பர் 29-ந்தேதி ஜப்பானில் உள்ள திரையரங்கில் வெளியிட்டனர். பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டபோதும், அங்கு பாகுபலி-2 பெரிதாக வசூலிக்கவில்லை.
இந்த நிலையில், பாகுபலி-2 படம் நேற்று ரஷ்யாவில் வெளியிடப்பட்டுள்ளது. ஜப்பானை விட அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்து வசூல் ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விளம்பரத்திலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார்களாம்.



Leave A Comment
You must be logged in to post a comment.