வி.கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படம் துப்பாக்கி முனை. நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். தற்போது விக்ரம் பிரபுவை இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைக்கிறார்.

இதில் துப்பாக்கி முனையில் கைதிகளைக் குறி வைத்து என்கவுன்ட்டர் செய்யும் போலீஸ் அதிகாரியாக விக்ரம் பிரபு நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் 33 பேரை கொலை செய்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

போலீஸ் தொடர்புடைய படம் என்பதால் பல தலைப்புகள் யோசிக்கப்பட்டு இறுதியில் துப்பாக்கி முனை என்று பெயர் தேர்வானது. ரஜினிக்கு மூன்று முகம், சூர்யாவுக்கு காக்க காக்க, கமலுக்கு காக்கிச் சட்டை, விஜயகாந்துக்கு கேப்டன் பிரபாகரன், விக்ரமிற்கு சாமி மாதிரி இந்தப் படம் விக்ரம் பிரபுக்கு அமையும் என்கிறார்கள். படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. படத்தின் நாயகி யார்? மற்ற கலைஞர்கள் யார் என்பதை பற்றி விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.