மூன்றாம் பிறை படத்தில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய கண்ணே கலைமானே…. கன்னி மயிலென கண்டேன் உனை நானே… என்ற பாடலின் முதல் வரியான “கண்ணே கலைமானே”, உதயநிதி நடிக்கும் படத்தின் தலைப்பாகி இருக்கிறது. கவிஞர் கண்ணதாசன் எழுதிய கடைசி பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. உதயநிதி ஸ்டாலின் தயாரித்த நீர்பறவை படத்தை இயக்கிய சீனு ராமசாமி இந்தப் படத்தை இயக்குகிறார்.

இப்படை வெல்லும் படத்திற்கு பிறகு உதயநிதி நடிக்கும் படம் இது. ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. தர்மதுரை படத்தில் நடிக்க வைத்த நட்பின் அடிப்படையில் சீனு ராமசாமி தமன்னாவிடம் பேச்சு நடத்தி வருகிறார். இவர்கள் தவிர சூரி, ஆர்.கே.சுரேஷ் நடிப்பார்கள் என்று தெரிகிறது. கிராமத்து பின்னணியில் உருவாகும் செண்டிமெண்ட், ஆக்ஷ்ன், காமெடி கலந்த கதை. இதன் படப்பிடிப்புகள் ஜனவரி மாதம் தொடங்குகிறது.