சிவா – அஜித் மீண்டும் இணைய உள்ள ‘விசுவாசம்’ படத்திற்காக அஜித்திடம் பல மாற்றங்கள். அவருடைய முக்கிய மாற்றமே அவருடைய தோற்றம் தான். ‘சால்ட் அன்ட் பெப்பர்’ தோற்றத்திலிருந்து அஜித் ‘கருப்பு கலரிங்’ தலைமுடியுன் புதிய தோற்றத்தில் நடிக்க உள்ளார். அதற்கான ‘மேக்கப் டெஸ்ட்’ செய்யும் வேலைகள் ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டது.
அந்தத் தோற்றத்தில் அஜித் முந்தைய இளமையான அஜித் தோற்றத்தை விடவும், சால்ட் அன்ட் பெப்பர் தோற்றத்தை விடவும் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கிறார். அந்தத் தோற்றத்தில் அஜித் வெளியில் சென்ற போது எடுத்த சிலர் எடுத்த புகைப்படங்கள் அதிகமாகப் பரவி வருகின்றன.
ஆனால், அஜித்தின் புதிய தோற்றத்தை நேரடியாக ஒரு புகைப்படத்தில் பார்த்த ஒருவர், ‘விசுவாசம்’ படத்தில் அஜித்தின் தோற்றமே அவருடைய ரசிகர்களை அதிகம் கவர்ந்துவிடும் என்கிறார்.
குடும்பப் பாங்கான கதையாக உருவாக உள்ள இந்தப் படத்தில் கிளாமர் இல்லாத ஹீரோயினைத் தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளார்களாம். அனேகமாக, அனுஷ்கா அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்கிறார்கள். அனுஷ்காவும் முன்பை விட இப்போது தோற்றத்தில் மாறிவிட்டார். இருவருடைய ஜோடிப் பொருத்தம் படத்திற்கு சிறப்பு சேர்க்கும் என்பது படக்குழுவினரின் முடிவாம்.
Leave A Comment
You must be logged in to post a comment.