அஜித் – சிவா கூட்டணி நான்காவது முறையாக இணையும் படத்திற்கு விசுவாசம் என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

வீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து விவேகம் படத்தில் அஜித் – சிவா கூட்டணி இணைந்தது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பு பெறவில்லை. சிவா, அஜித் கூட்டணி இனி வேண்டாம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் குரல் கொடுத்தனர். இருப்பினும் நான்காவது முறையாக இவர்கள் இணைவார்கள் என செய்திகள் வெளியான நிலையில் இப்போது இந்த கூட்டணி உறுதியாகி இருக்கிறது.

படத்திற்கு “விசுவாசம்” என்று தலைப்பிட்டுள்ளார்கள். விவேகம் படத்தை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸே தயாரிக்கிறது. ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. ஜனவரி மாதம் படத்தை ஆரம்பிக்கிறார்கள். 2018, தீபாவளி தினத்தில் படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது.