சென்னை-600028 படத்தின் மூலம் இயக்குநரான வெங்கட்பிரபு அதன் பிறகு அஜித்தை வைத்து மங்காத்தா படம் இயக்குமளவுக்கு உச்சம் தொட்டார். அதோடு, கார்த்தியை வைத்து பிரியாணி, சூர்யாவை வைத்து மாசு என்கிற மாசிலாமணி படங்களையும் இயக்கினார்.
இந்த இரண்டு படங்களும் தோல்விப்படங்களாக அமைந்தது. கடைசியாக சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். அந்தப் படமும் பெரிதாக தேறவில்லை.
இந்நிலையில், ‘மிர்ச்சி’ சிவா, ‘கயல்’ சந்திரன், ஷாம், சத்யராஜ, ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கெசன்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ், நாசர், சம்பத், சுரேஷ் என பெரிய நட்சத்திரப் பாட்டாளத்தை நடிக்க வைத்து ‘பார்ட்டி’ என் படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு.
‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, பிஜி தீவில் 55 நாட்கள் நடைபெற்றுள்ளது. ‘பார்ட்டி’யை ஜனவரி மாதம் வெளியிட உள்ளனர். இந்தப் படத்தை முடித்த பிறகு மீண்டும் சென்னை 600028 நடிகர்களை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் வெங்கட்பிரபு.
Leave A Comment
You must be logged in to post a comment.