மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘இரும்புத்திரை’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இரும்புத்திரை படத்தின் டிரைலரை மலேசியாவில் வருகிற 6- ஆம் தேதி நடைபெறவிருக்கும் நட்சத்திர கலை விழாவில் வெளியிடவிருக்கிறார்கள். இந்த படத்துடன் விஷால் நடித்து வரும் ‘சண்டக்கோழி-2’ படத்தின் டீசரையும் மலேசியாவில் நடைபெறும் கலைவிழாவில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள். சண்டக்கோழி-2 படத்தின் டீசரை மலேஷியாவில் வெளியிட்டால் சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என விஷால் கருதுகிறாராம்.

அதேசமயம், நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்டும் கலைவிழாவை தன்னுடைய படத்துக்கான பப்ளிசிட்டிக்கு பயன்படுத்துவதா என்ற முணுமுணுப்பும் தற்போது கேட்க ஆரம்பித்துள்ளது.