குட்டிப்புலி படத்தைய இயக்கிய முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள கொடிவீரன் படம் கடந்த மாதமே வெளியாகவிருந்தது. குறிப்பிட்ட காலத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. எனவே இம்மாதம் 30-ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளனர்.
ஒரு படத்தில் நடித்து முடித்ததும் சில வாரங்கள் ஓய்வு எடுத்த பிறகு தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டு விடுவார். கொடிவீரன் படத்தை முடித்துவிட்ட நிலையில் சசிகுமார் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்து சசிகுமார் நடிக்கவிருக்கும் படத்தின் பெயர் -அசுரவதம்.
சென்னை உங்களை வரவேற்கிறது படத்தை இயக்கிய எம்.மருதுபாண்டியன் இந்த படத்தை எழுதி இயக்குகிறார். இந்தப் படத்தை செனவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ என்ற படநிறுவனம் சார்பில் திருமதி லீனா லலித்குமார் தயாரிக்கிறார். இதுவரை சொந்தப்படத்தில் நடித்து வந்த சசிகுமார் இந்தப் படத்துக்கு 4 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகிறது!
Leave A Comment
You must be logged in to post a comment.