நாய்கள் ஜாக்கிரதை, ‘மிருதன்’ படங்களைத் தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் படம் ‘டிக் டிக் டிக்’. மிருதன் படத்தை அடுத்து ‘ஜெயம்’ ரவியுடன் சக்தி சௌந்தர்ராஜன் இணைந்துள்ள இந்தப் படம் இந்தியாவின் முதன் விண்வெளி திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது என்று சொல்லப்படுகிறது.

டி.இமான் இசை அமைக்கும் இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக , நிவேதா பெதுராஜ் நடித்துள்ளார். நேமிசந்த் ஜபக் தயாரித்துள்ள ‘டிக் டிக் டிக்’ படத்தை அண்மையில் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்துக்கு எந்த ‘கட்’டும் கொடுக்கவில்லை.
அதுமட்டுமல்ல, அனைத்து தரப்பினரும் பார்க்கக் கூடிய படம் என்று ‘டிக் டிக் டிக்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழும் வழங்கியது. குடியரசு தினத்தை முன்னிட்டு ‘டிக் டிக் டிக்’ படம் வருகிற 26-ஆம் தேதி வெளியாகிறது.
கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவினால் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார் ஜெயம்ரவி. அதனால் டிக் டிக் டிக் படத்தின் புரமோஷன்களில் கூட அவரால் முழுமையாய் ஈடுபட முடியவில்லை. இருந்தாலும் இன்று அவர் மீடியாக்களை சந்திக்க உள்ளார். ஜனவரி 26-ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.



Leave A Comment
You must be logged in to post a comment.