சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விசுவாசம் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த படத்தின் தலைப்பு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தில் இடம்பெறும் மற்ற கலைஞர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், படத்தில் அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகளில் ஒருவர் நாயகியாக நடிக்கலாம் என்று செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது.

அதோடு, அனிருத் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் அஜித்துடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வீரம் படத்திற்கு பிறகு சிவா இயக்கத்தில் நடித்த வேதாளம், விவேகம் படங்களில் நகரத்து கதையில் நடித்த அஜித், விசுவாசம் படத்தில் மீண்டும் கிராமத்து கதையில் நடிக்கிறாராம். சால்ட் அண்ட பெப்பர் கெட்டப்புக்கு இந்த படத்தில் குட்பை சொல்கிறார். அதோடு, தனது உடல்கட்டையும் ஸ்லிம் பண்ணி நடிக்கிறார் அஜித்.



Leave A Comment
You must be logged in to post a comment.