2010ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் தமிழ் படம். சிவா, திஷா பாண்டே நடித்து வெளிவந்த இந்தப் படம், தமிழ் சினிமாவையும், சினிமா ஹீரோக்களையும் கடுமையாக கிண்டல் செய்தது. இதனை சி.எஸ்.அமுதன் இயக்கி இருந்தார். ஒய் நாட் சசி தயாரித்திருந்தார்.

இப்போது தமிழ் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. அதே தயாரிப்பாளர் சசி, இயக்குனர் சி.எஸ்.அமுதன், ஜெய், திஷா பாண்டே இணைந்து பணியாற்றுகிறார்கள். ஆனால் இந்த முறை தமிழ் படம் சினிமாவை கிண்டல் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. தற்போது தமிழக துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவின் சமாதி முன் தியானம் செய்து விட்டு பரபரப்பு பேட்டி அளித்தார். அரசியல் மாற்றங்களுக்கு அந்த பேட்டி முதல் காரணமாக இருந்தது. ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா சமாதி முன் உட்கார்ந்திருப்பது போன்று, படத்தின் ஹீரோ உட்கார்ந்திருக்கிறார். இந்த போஸ்டர் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் போலீசை கிண்டல் செய்யப்போகிறது என்பதை போலீஸ் அத்தியாயம் என சப் டைட்டில் கொடுத்து தெரிவித்திருக்கிறார்கள்.