பையில் உள்ள கிரெடிட் கார்டுகளில் லட்சக்கணக்கில் பணம் இருந்தும் பஸ் டிக்கெட் எடுக்க’ கையில் பத்து ரூபாய் நோட்டு இல்லாதவனின் நிலை தான் நடிகை த்ரிஷாவுக்கு. இப்போதுள்ள நடிகைகளிலேயே ரொம்ப சீனியர் என்றாலும் இந்த வருடம் அதிக படங்களில் அதாவது சதுரங்க வேட்டை-2, மோகினி, 96, 1818, கர்ஜனை, ஹே ஜூடு என 6 படங்களில் நடித்துவரும் அளவுக்கு பிசியான நடிகையும் த்ரிஷா தான்.

அதேசமயம் இந்த வருடம் அவர் நடித்த ஒரு படம் கூட ரிலீசாகவில்லை என்பது உண்மையிலேயே நகைமுரண் தான். அதுமட்டுமல்ல, அவரது சினிமா பயணத்தில் அவரது படம் வெளியாகாத ஆண்டும் இதுதான்.

த்ரிஷா மலையாளத்தில் முதன்முதலாக நடித்துவரும் ‘ஹே ஜூடு’ படத்தின் டீசரும் தமிழில் நடித்துவரும் மோகினி படத்தின் டிரைலரும் மட்டுமே கடந்த இரண்டு தினங்களில் வெளியாகி அவருக்கு இந்த வருட கடைசியில் புன்னகையை வரவழைத்துள்ளது.

வரும் 2018 நிச்சயம் த்ரிஷாவின் ஆண்டாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.