சில ஆண்டுகளுக்கு முன்புவரை பிசியான ஹீரோவாக வலம் வந்தவர் விமல். சினிமாத்துறையின் நெளிவுசுழிவுகள் தெரியாததினால் பல தயாரிப்பாளர்களிடம் தன் சம்பளத்தை கறாராக வாங்காமல் விட்டு ஏமாந்து போனார்.

இதன் காரணமாக பெரும் தொகையை இழந்த விமல், இன்னொரு பக்கம் தோல்விப்படங்களிவ் நடித்ததால் மார்க்கெட் இழந்தார். இந்நிலையில் தன்னுடைய ‘A3V சினிமாஸ்’ என்ற சொந்த பட நிறுவனத்தின் மூலம் ‘மன்னர் வகையறா’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார். பிரபு, சரண்யா, ‘ரோபோ’ சங்கர், ‘யோகி’ பாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி), சாந்தினி ஆகியோரும் நடித்துள்ளனர்.

பொங்கல் ரிலீசாக அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை ஒரு விநியோகஸ்தரிடம் கொடுத்திருந்தார். அந்த விநியோகஸ்தர் கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ளவில்லை. சொன்ன தேதிகளில் பணத்தையும் கொடுக்கவில்லை. எனவே அந்த அக்ரிமெண்ட்டை ரத்து செய்துவிட்டு, ‘சினிமா சிட்டி’ என்ற நிறுவனத்திடம் கொடுத்துள்ளார் விமல்.

அரவிந்த்சாமி, த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘சதுரங்கவேட்டை-2’ படத்தின் விநியோக உரிமையையும் இதே நிறுவனம் தான் வாங்கியுள்ளது.