தற்போது அடல்ட் கண்டன்ட் என்கிற ஆபாசப்படங்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. அண்மையில் வெளியான தரமணி, ஹர ஹர மகாதேவகி படங்களுக்கு முன் வெளியாகி வசூலைக்குவித்த அடல்ட் கண்டன்ட் படம் படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ் முதலானோர் நடிப்பில் வெளியானது இந்தப்படம். அப்போது வசூலைக்குவித்த இந்த படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன்.
இந்த படத்தை தொடர்ந்து தனது மூன்றாவது படமாக ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் ஆதிக். இந்த படம் காதல் பேண்டஸி திரைப்படமாக, 3D தொழில்நுட்பத்தில் உருவாகவிருக்கிறது.
‘அரண்மனை’ படத்தை தயாரித்த ‘விஷன் மீடியா’ தினேஷ் கார்த்திக் இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறார். இந்த படத்தில் சோனியா அகர்வாலும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகிறது.
Leave A Comment
You must be logged in to post a comment.