சிகரம் தொடு படத்தை இயக்கிய கௌரவ் நாராயணன் இயக்கியிருக்கும் படம் ‘இப்படை வெல்லும்’.
உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடிக்கும் இந்தப்படம் நவம்பர் 9-ஆம் தேதி வெளியானது.
வெள்ளிக் கிழமைகளில் தான் படங்கள் வெளியாகும்.

அஜித் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்கள் வியாழக்கிழமைகளில் வெளியிடப்படுவதைப் பார்த்து,
அதாவது புலியைப்பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்ட கதையாக ‘இப்படை வெல்லும்’ படத்தை
வியாழக்கிழமை வெளியிட்டனர். படத்தின் இயக்குநர் கௌரவ் நாராயணனின் பேச்சைக் கேட்டு
‘இப்படை வெல்லும்’ படத்தை வியாழக்கிழமை வெளியிட்ட லைகா நிறுவனம் தற்போது
இடிந்துபோய் உட்கார்ந்திருக்கிறது.

அதாவது தமிழ்நாடு முழுக்க ஒரு தியேட்டரில் கூட இப்படை வெல்லும் படத்துக்கு ஓப்பனிங்
இல்லை. அது மட்டுமல்ல ஒவ்வொரு தியேட்டரிலும் 50 முதல் 100 பார்வையாளர்களே படம் பார்க்க
வந்துள்ளனர். இதனால் இன்னும் சில தினங்களிலேயே தியேட்டரைவிட்டு தூக்கப்படும்
நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது.

நேற்று படம் வெளியானதையொட்டி தியேட்டர் ரவுண்ட்ஸ் சென்றிருக்கிறார் உதயநிதி. சென்னையில்
‘இப்படை வெல்லும்’ வெளியான ஒரு தியேட்டரில் கூட கூட்டம் இல்லை. அது மட்டுமல்ல
படத்தைப் பற்றிய நெகட்டிவ் டாக் அதிகமாக வர அப்செட்டாகிவிட்டார்.