கேரளாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பை, அதிதீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

நிலச்சரிவு, வெள்ளத்தால் லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில் கேரளாவிற்கு மற்ற மாநிலங்களும், பல மாநில திரையுலக பிரபலங்களும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவை பொறுத்தமட்டில் கமல், ரஜினி, விக்ரம், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நிதி உதவி அளித்த நிலையில் நடிகர்கள் விஜய், அஜித் இந்த விஷயத்தில் அமைதியாக இருந்தது சர்ச்சையை கிளப்பின.

இந்நிலையில் நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதி உதவி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் மூலமாக இந்த தொகையை அவர் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.