நேரம் படத்தை அடுத்து மலையாள முன்னணி நடிகரான நிவின்பாலி மீண்டும் நேரடியாக நடித்துள்ள தமிழ்ப்படம் தான் ‘ரிச்சி’. மிஷ்கினின் சீடரான கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் ‘கள்ளபடம்’ லட்சுமி ப்ரியா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, இன்னொரு கதாநாயகனாக ‘சதுரங்க வேட்டை’ புகழ் நட்டி நடித்திருக்கிறார். பிரகாஷ்ராஜும், விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் நிவின்பாலியும், படகுகளை சரி செய்யும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நட்டியும் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ள இந்தப்படம் கடந்த மே மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரும் டிச-8ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Leave A Comment
You must be logged in to post a comment.