பெங்களூர் பொண்ணு ஷனம் ஷெட்டி. ப்ரீத்திக்கு நான் கியாரண்டி விளம்பரத்தின் மூலம் புகழ்பெற்றவர். அம்புலி என்ற 3டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
அதன்பிறகு மாயை, விலாசம், கதம் கதம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி, சதுரம் 2, உள்பட பல படங்களில் நடித்தார். ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 23, டிக்கெட் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான வில்லா டூ வில்லேஜ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில் திடீர் தயாரிப்பாளராகி இருக்கிறார் ஷனம் ஷெட்டி. மேகி என்ற படத்தை தயாரிக்கிறார். படத்தின் டைட்டிலையும், தயாரிப்பு நிறுவனத்தையும் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளார். விரைவில் படம் பற்றி முழு அறிவிப்பை வெளியிட இருக்கிறார். படத்தில் நடிக்கும், நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் படம் தயாராக இருக்கிறது.
Leave A Comment
You must be logged in to post a comment.