இசைஞானி இளையராஜாவிற்கு தமிழ்நாட்டைப்போலவே ஆந்திராவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போதும் அவர் தெலுங்கு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில், ஐதராபாத்தில் ஒரு பிரமாண்ட லைவ் இசை நிகழ்ச்சி நடத்தப்போவதாக கூறியிருந்த இளையராஜா, நேற்று அந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

சுமார் 40 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் தெலுங்கில் தனது இசையில் உருவான ஹிட் பாடல்களாக பாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார் இளையராஜா. இந்த இசை நிகழ்ச்சிக்காக ஹங்கேரியில் இருந்து 85 இசைக்கலைஞர்களை வரவைத்திருக்கிறார் இளையராஜா. மேலும், இந்த இசை நிகழ்ச்சியில் தெலுங்கு திரைப்பட நடிகர் நடிகைகள் மட்டுமன்றி சில அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டு இளையராஜாவின் பாடல்களை ரசித்துள்ளனர்.