எமன் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடிக்கும் படம் அண்ணாதுரை. இதில் டயனா சாம்பிகா, மஹிமா, ஜூவல் மேரி, என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர ராதாரவி, காளி வெங்கட், நளினி காந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள். விஜய் ஆண்டனியே இசையும் அமைத்து எடிட்டிங் பணிகளையும் கவனித்துக் கொள்கிறார். ராதிகா சரத்குமாரும், பாத்திமா விஜய் ஆண்டனியும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி இரண்டு வேடத்தில் நடிக்கிறார். அண்ணாத்துரை என்ற கேரக்டரிலும், தம்பித்துரை என்ற கேரக்டரிலும் நடிக்கிறார். இதில் அண்ணாத்துரை மெயின் கேரக்டர் என்றும், தம்பித்துரை பிளாஷ்பேக்கில் வரும் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. இரண்டு கேரக்டர்களுக்கு இரண்டு ஹீரோயின், இன்னொரு ஹீரோயின் தங்கையாக நடிக்கிறார். அண்ணனை இழந்து தவிக்கும் ஒரு குடும்பத்திற்கு அண்ணனாக சென்று அந்த குடும்பத்தை பிரச்னையிலிருந்து காப்பாற்றுகிற கதை என்கிறார்கள். நவம்பர் 30ந் தேதி வெளிவருகிறது.