தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே ஒரு படம் 25 நாளைக் கடப்பதே பெரிய விஷயமாக போய்க் கொண்டிருக்கிறது. அதிலும் சில படங்களக்கு இரண்டு நாளைக் கடப்பதே அதைவிடப் பெரிய விஷயமாக இருக்கிறது. வெள்ளிக்கிழமை படம் வெளியானால், அடுத்து வரும் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தப் படம் வசூல் பெற்றுவிட்டால் ஓரளவிற்கு நஷ்டத்திலிருந்து தப்பித்துவிடும் நிலைமை இருக்கிறது.

இந்த 2018ம் வருடத்தில் சில படங்கள் 50 நாளைக் கடந்து ஓடியிருக்கின்றன. அது உண்மையிலேயே வெற்றிகரமாக ஓடியதா அல்லது ஓட்டப்பட்டதா என்பது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்குத்தான் தெரியும்.

இந்த வருடத்தில் இதுவரை “தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி, மன்னர் வகையறா, கலகலப்பு 2, நாச்சியார், இரும்புத் திரை, காலா” ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘டிக் டிக் டிக்’ படமும் 50வது நாளைத் தொட்டிருக்கிறது. இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் 50 நாட்களைக் கடந்தும், லாபத்தையும் கொடுத்த படமாக ‘டிக் டிக் டிக்’ படம் இருந்தது என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் ஜெயம் ரவி, நிவேதா பெத்து ராஜ் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் ஜுன் 22ம் தேதி வெளிவந்தது.