தமிழ்த் திரைப்படங்களின் பாடல்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கிறது என்பதை இன்றைய ரசிகர்கள் யு டியூப் பார்வைகளை வைத்துத்தான் அதிகமாக முடிவெடுக்கிறார்கள். சில பாடல்கள் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று 5 கோடி பார்வைகளையும் தாண்டிச் சென்றுள்ளன.
இதுவரை 5 கோடியைக் கடந்த பாடல்கள் என இரண்டு பாடல்கள் மட்டுமே அந்த 5 கோடி கிளப்பில் இடம் பிடித்துள்ளன. முதன் முதலில் 5 கோடியைக் கடந்த பாடலாக ‘மாரி’ படத்தில் இடம் பெற்ற ‘டானு டானு’ பாடல் சாதனை புரிந்தது. அதற்கடுத்து ‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்ற ‘ஆளப் போறான் தமிழன்’ பாடல் இரண்டாவதாக 5 கோடியைக் கடந்து, தற்போது 6 கோடியையும் தாண்டியுள்ளது. ‘டானு டானு’ பாடல் 6 கோடியைத் தொட இன்னும் 6 லட்சம் பார்வைகள் வேண்டும். ‘ரஜினி முருகன்’ படத்தில் இடம் பெற்ற ‘உன் மேல ஒரு கண்ணு’ பாடலும் 5 கோடி கிளப்பில் உள்ளது.
5 கோடி பார்வை வரிசையில் தற்போது ‘குலேபகாவலி’ படத்தில் இடம் பெற்ற ‘குலேபா…’ பாடல் இடம் பிடித்துள்ளது. விவேக் மெர்வின் இசையமைப்பில் கார்த்திக் எழுதி அனிருத், மெர்வின் சாலமான பாடியுள்ள பாடல் அது. கடந்த வாரம் அந்தப் பாடல் 5 கோடியைக் கடந்தது. படம் சரியாகப் போகவில்லை என்றாலும் படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடல் வித்தியாசமான இசையாலும், பிரபுதேவாவின் அதிரடி நடனத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்தது.
‘குலேபா’ பாடலுக்குப் பிறகு 5 கோடி பார்வையைத் தொடும் வாய்ப்பு ‘கோலமாவு கோகிலா’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘கல்யாண வயசு..’ பாடலுக்குக் கிடைக்கலாம். இந்தப் பாடல் 4 கோடிய 20 லட்சம் பார்வையைத் தொட உள்ளது.
Leave A Comment
You must be logged in to post a comment.