தீரன் அதிகாரம் ஒன்று படத்தை அடுத்து பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் கடைக்குட்டி சிங்கம்.

இந்த படத்தில் கார்த்தியுடன் சாயிஷா செய்கல், பிரியா பவானிசங்கர், சத்யராஜ், சூரி உள்பட பலர் நடிக்கிறார்கள். டி. இமான் இசையமைக்கிறார். எப்போதுமே தனது படங்களில் சூரிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாண்டிராஜ், இந்த படத்திலும் படம் முழுக்க கார்த்தியுடன் பயணிக்கும் காமெடி வேடம் கொடுத்துள்ளார்.
கிராமத்து கதையில் உருவாகும் இந்த படத்தில், கார்த்தி குடும்பத்தின் கடைசி பையனாம். அதனால்தான் படத்திற்கு கடைக்குட்டி சிங்கம் என்று பெயர் வைத்துள்ளார் பாண்டிராஜ். அதோடு, கதைப்படி கார்த்திக்கிற்கு ஐந்து அக்கா கேரக்டர்கள் உள்ளதாம். அதனால் அவருக்கு பெற்றோர் மட்டுமின்றி, ஐந்து அக்காவும் அளவு கடந்த பாசம் காட்டுவார்களாம். அந்த வகையில், இந்த படத்தில் கார்த்திக் மீது அக்காக்கள் காட்டும் பாசத்தை மையமாக வைத்து ஒரு செண்டிமென்ட் பாடலும் உள்ளது என்கிறார்கள்.



Leave A Comment
You must be logged in to post a comment.