அஜித் – சிவா கூட்டணி 4வது முறையாக இணைந்துள்ள படம் விஸ்வாசம். விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸே தயாரிக்கிறது. இப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகி நாட்களாகிவிட்ட நிலையில் ஜனவரி மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றார்கள். ஆனால் படம் திட்டமிட்டபடி ஆரம்பமாகவில்லை.

ஹீரோயின் உள்ளிட்ட மற்ற தேர்வுகள் நடந்து வந்தன. அதேசமயம், படத்திற்கான உருவாக்கத்திற்கான எழுத்துப் பணிகளும் நடந்து வந்தது. தற்போது பணிகள் முடிவடைந்து விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
இந்நிலையில் படத்திற்கான ஹீரோயின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். வருகிற மார்ச் 15-ம் தேதி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்ட்டட் ஹீரோயினாக வலம் வரும் நயன்தாரா, அஜித்திற்கு மேலும் பக்கபலமாய் அமைந்துள்ளது. ஏற்கனவே இந்த ஜோடி, பில்லா, ஏகன், ஆரம்பம் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இப்போது நான்காவது முறையாக இந்த ஜோடி இணைந்துள்ளது.



Leave A Comment
You must be logged in to post a comment.