நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், நாடோடி மன்னன் உள்ளிட்ட 16 படங்களை தயாரித்த, ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம், 17 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிக்கும் படம் “களவாணி மாப்பிள்ளை”. இந்நிறுவனத்தின் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் இருந்த மணிவாசகத்தின் மகன், காந்தி மணிவாசகம் இப்படத்தை இயக்குகிறார்.

 

அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக அதிதி மேனன் நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

காமெடி கலந்த காதல் கதையாக உருவாக உள்ள இந்த படத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது.