
நடிகர் ரஜினி நடித்துள்ள காலா பட டீசர் இன்று வெளியானது. மார்ச் 1-ம் தேதி வெளியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இன்று ( மார்ச்,2) வெளியானது. படத்தின் தயாரிப்பாரான நடிகர் தனுஷ் டீசரை வெளியிட்டார். கபாலி படத்தினை இயக்கிய ப.ரஞ்சித் இயக்கிய தனுஷ் தயாரிக்க, லைகா நிறுவனம் வெளியிடும் இந்தப் படத்தில், நானா படேகர், சமுத்திரக்கனி, வத்திக்குச்சி திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர். காலா படம் ஏப். 27-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. காலா டீசர் வெளியான சற்று நேரத்தில் பல்லாயிரம் பேர் டீசர் பார்த்துள்ளனர்.



Leave A Comment
You must be logged in to post a comment.