நடிகை அமலாபால், விஜய்யை விவாகரத்து செய்த பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாகி உள்ளார். தற்போது அவர் நடித்து, முடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் வெளியாக உள்ளது. மலையாளத்தில் இரண்டு படங்களிலும், தமிழில் ஓரிரு படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு அமலாபாலின் புதிய படம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவர் நடிக்கும் படத்திற்கு “அதோ அந்த பறவை போல” என பெயர் வைத்துள்ளனர். எம்ஜிஆர்., நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற அதோ அந்த பறவை போல பாடலின் முதல் வரியை தலைப்பாக்கி உள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் வினோத் இயக்குகிறார்.
“அதோ அந்த பறவை போல” படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகை காஜல் அகர்வால், தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதோடு, அந்தப்படம் வெற்றியடைய வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.



Leave A Comment
You must be logged in to post a comment.