மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்த சாய் பல்லவி, தெலுங்கில் பிடா படத்தில் நடித்தார். அதையடுத்து தமிழில் இப்போது அவரது முதல் படமாக கரு வெளிவர உள்ளது. இந்த படத்தில நான் அம்மா வேடத்தில் நடிப்பதை சிலர் கிண்டல் செய்தனர். ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. காரணம், கரு படத்தின் கதை எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது என்கிறார் சாய் பல்லவி.

அவர் கூறுகையில், மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடிப்பதற்கு முன்பு அந்த கதை எப்படி என்னை பாதித்ததோ அதே போன்று தான் பிடா தெலுங்கு படத்தின் கதையும் என்னை பாதித்தது. அதனால் தான் தமிழிலும் அதுபோன்ற ஒரு நல்ல கதையில் அறிமுகமாக வேண்டும் என்று வெயிட் பண்ணிக்கொண்டிருந்தேன்.
அப்போது இயக்குநர் விஜய், என்னை தொடர்பு கொண்டு இந்த மாதிரி ஒரு கதை உள்ளது. நடிக்கிறீர்களா? என்று கேட்டார். முதலில் எனக்கு அந்த கதை பெரிதாக தெரியவில்லை. அதனால் நடிக்கவில்லை என்று சொல்லி விட்டேன். ஆனால் அதன்பிறகு அவர் எனது அம்மாவை சந்தித்து கரு படக்கதையை சொல்லியிருக்கிறார். அவர்களுக்கு அந்த கதை பிடித்துப்போக அதன் ஆழம் பற்றி என்னிடம் சொன்னார்.
அதன்பிறகு நான் முழுக்கதையையும் கேட்டேன். கதையை கேட்க கேட்க அது என்னை ஈர்த்து விட்டது. எனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது கரு படத்தின் கதை. அதனால் பிரேமம், பிடா படங்களை விட இந்த படம் தமிழில் எனக்கு ஒரு பெரிய ஓப்பனிங்கை ஏற்படுத்திக்கொடுக்கும் என்கிறார் சாய் பல்லவி.



Leave A Comment
You must be logged in to post a comment.