பிரபல நடன மாஸ்டர் சுந்தரத்தின் மகன் பிரபுதேவா. சினிமாவில் நடன மாஸ்டராகவே அறிமுகமான அவர், ஆரம்பத்தில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே, ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது உள்பட பல ஹிட் பாடல்களில் நடனமாடினார். அதன்பிறகு ஷங்கர் இயக்கிய காதலன் படத்தில் ஹீரோவானார்.

மேலும், பல ஆண்டுகளாக இந்தியில் படம் இயக்க சென்று விட்ட பிரபுதேவா மீண்டும் தமிழில் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதில் தேவி படத்தை அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அவர் நடிக்கும் லட்சுமி படம் நடனத்தை மையப்படுத்திய கதையில் உருவாகிறது.
இதற்கு முன்பு தெலுங்கு, இந்தியில் வெளியான ஏபிசிடி, ஏபிசிடி-2போன்ற படங்களில் நடனத்தை மையமான கதையில் நடித்திருந்தார் பிரபுதேவா. அதேபோலவே இப்போது லட்சுமி படத்திலும் நடனம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்கிறார். அதனால் இந்த படம் இதுவரையில்லாத அளவுக்கு வித்தியாசமான நடன அசைவுகளை வெளிப்படுத்த தயாராகிக்கொண்டிருக்கிறார் பிரபுதேவா.
அந்த வகையில், பிரபுதேவாவின் லட்சுமி படம் பொழுதுபோக்கு மட்டுமின்றி உணர்ச்சிப் பூர்வமான கதையில் உருவாகிறது.



Leave A Comment
You must be logged in to post a comment.