நட்சத்திர தம்பதியர் ராஜசேகர் – ஜீவிதாவின் வாரிசு ஷிவானி. டாக்டருக்கு படித்து வரும் இவருக்கும் சினிமா மீது மோகம் அதிகம். அதனால் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்க முயற்சி எடுத்து வந்தார். தற்போது அதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது.

தெலுங்கில் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார். இந்தப்படம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே தமிழில் மூன்று படங்களில் கமிட்டாகி உள்ளார்.
மஞ்சப்பை, கடம்பன் படங்களின் இயக்குநர் ராகவன், அதர்வாவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். இதில், அதர்வா ஜோடியாக ஷிவானி நடிக்கிறார்.
இதுதவிர, விஷ்ணு விஷால் நடிக்கும் கவரிமான் படத்திலும், இன்னும் ஒரு புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.



Leave A Comment
You must be logged in to post a comment.