நீல நதி, யாக்கை ஆகிய சிறுகதை தொகுப்புகளையும், உப்பு நாய்கள், கானகன், கொமோரா ஆகிய நாவல்களையும் எழுதியிருக்கிறார் லக்ஷ்மி சரவணகுமார். இவர், எழுதிய கானகன் நாவலுக்கு 2016ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவபுரஷ்கார் விருது வழங்கப்பட்டது.

இயக்குனர் வசந்தபாலனிடன் உதவி இயக்குனராக இருந்த லக்ஷ்மி சரவணகுமார், காவியத் தலைவன், அரவான் படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியாக இருக்கும், 2.ஓ திரைப்படத்தில் மேக்கிங் ஆப் எந்திரன் 2.ஓவை எழுத்து வடிவில் எழுதியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான இந்தியன் -2 திரைப்படத்தில் வசனம் எழுதும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் லக்ஷ்மி சரவணகுமார்.
இந்தத் திரைப்படத்தில் எழுத்தாளர் ஜெயமோகன், கபிலன் வரைமுத்து ஆகியோர்களும் வசனம் எழுதுகிறார்கள்.



Leave A Comment
You must be logged in to post a comment.