‘பிக்பாஸ்’ பிரபலங்களான, ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம், பியார் பிரேமா காதல்.

இப்படத்தின், ‘ஹாய் ஆன் லவ்…’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்த படத்தை, ஹிந்தியிலும் வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. இதனால், ரைசா வில்சன் ஹிந்தியிலும் கால் பதிக்க உள்ளார். ‘தற்போதைய இளைஞர்களின் நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில், இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. காதல் காட்சிகள், கண்டிப்பாக இளைஞர்களை கவரும்’ என்கிறது, படக்குழு.



Leave A Comment
You must be logged in to post a comment.