‘காலா’ படத்தில் அஞ்சலி எங்கே நடித்திருக்கிறார் என்று கேட்காதீர்கள். இந்த அஞ்சலி, அஞ்சலி பாட்டீல், ஹிந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார். ‘காலா’ படத்தில் தாராவி பகுதியில் வாழும் தமிழ் பேசத் தெரிந்த மராத்திப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

ஒரு டிவி பேட்டியில் ‘காலா’ எப்படிப்பட்ட படம் என்ற ரகசியத்தை உடைத்திருக்கிறார் அஞ்சலி பாட்டீல்.
”காலா’ ஒரு அரசியல் படம். படத்தின் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் ‘புயல் சாருமதி கெய்க்வாட்’. படத்தில் ரஜினி சாரின் காதலியாக ஹுமா குரேஷி நடித்திருக்கிறார். படத்தில் எனக்கு முக்கியத்துவமான கதாபாத்திரம். அதுதான் கதையை நகர்த்திச் செல்லும். எனக்கு சிறப்பான பல காட்சிகள் அமைந்துள்ளன. படத்தில் அழுத்தமான அரசியல் கருத்து உண்டு. அதில் ரஜினி சாருடன் நடிக்கும் காட்சிகளும் இருக்கின்றன.
படத்தின் பாதி பகுதியை மகாராஷ்டிராவிலும், பாதியை தமிழ்நாட்டிலும் எடுத்திருக்கிறோம். படத்திலும் மராட்டியம் சம்பந்தமான விஷயங்கள் உண்டு. அதனால்தான் இந்தப் படத்தை நான் தேர்ந்தெடுத்தேன்.
ரஜினி சார் மிகவும் எளிமையான மனிதர். அவரிடம் இருந்து மனிதத் தன்மையையும், பொறுப்பாக இருப்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும்,” என்கிறார் அஞ்சலி.



Leave A Comment
You must be logged in to post a comment.