ஹரஹர மஹாதேவகி படம் வசூலை குவித்ததால், தற்போது கோலிவுட்டில், அதேபோன்ற கதையம்சம் உள்ள, ‘அடல்ட்’ காமெடி படங்களுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது. அந்த வரிசையில், இப்போது, கஜினிகாந்த் என்ற படம் தயாராகி வருகிறது.

இதில், ஆர்யா ஹீரோவாகவும், வனமகன் படத்தில் நடித்த சாயீஷா, ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். வனமகன் படம், எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்றாலும், அதில் நடித்த சாயீஷா, இப்போது சத்தமில்லாமல், தமிழ் ஹீரோ மற்றும் இயக்குனர்களின், மனம் கவர்ந்த நடிகையாக உருவெடுத்து வருகிறார்.
ஜுங்கா, கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த் ஆகிய மூன்று படங்களில், தற்போது அவர் நடித்து வருகிறார். ‘ஆர்யா, இப்போது, ‘டிவி’ நடிகராகி விட்டார்’ என, பரவலாக பேசப்பட்டு வருவதால், தன் ஹீரோ அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்வதற்காக, இந்த படத்துக்காக கடுமையாக உழைத்து வருகிறாராம்.



Leave A Comment
You must be logged in to post a comment.