ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 62வது படம் கத்தி படத்தைப்போன்ற விவசாயம் சம்பந்தப்பட்ட கதையில் தயாராகிக்கொண்டிருக்கிறது. விவசாயமும், அரசியலும் கலந்த கதையில் உரு வாகும் இந்த படத்தில் ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் அரசியல்வாதிகளாக நடிப்பதாக ஏற்க னவே செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

மேலும், விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படத்தில் வரலட்சுமி எந்த மாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்பது சஸ்பென்சாக இருந்து வருகிறது. ஆனால் இப்போது அவரது கேரக்டர் பற்றிய ஒரு தகவல் கசிந்துள்ளது.
அதாவது இந்த படத்தில் வரலட்சுமியும் அரசியல்வாதியாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதுவும் தனுஷ் நடித்த கொடி படத்தில் திரிஷா நடித்தது போன்று நெகடீவான அரசியல்வாதி வேடமாம். இவரது கேரக்டர் மூலம்தான் கதையில் சில அதிரடியான திருப்பங்கள் நடைபெறுகிறதாம். ஆக, விஜய் 62 படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் வரலட்சுமி.



Leave A Comment
You must be logged in to post a comment.