மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்து வரும் படம் கண்ணு கண்ணும் கொள்ளையடித்தால். துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ரிது வர்மா நடிக்கும் இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இன்னொரு தமிழ்ப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் துல்கர். துல்கருக்கு ஜோடியாக 4 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்! ஒருவர் நிவேதா பெதுராஜ், இன்னொருவர் அர்ஜுன் ரெட்டி படப் புகழ் ஷாலினி பாண்டே! மற்ற இரண்டு ஹீரோயின்களுக்கான தேர்வு இப்போது நடந்து வருகிறது.

தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை கார்த்திக் என்ற புதியவர் இயக்குகிறார், ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது!

துல்கர் சல்மான் தெலுங்கில் நடித்துள்ள மகாநதி என்ற படம் தமிழில் டப் செய்யப்பட்டு நடிகையர் திலகம் என்ற பெயரில் மிக விரைவில் வெளியாகவிருக்கிறது.