ஹரஹர மகாதேவகி என்கிற ஆபாசப்படத்தில் நடித்த கவுதம் கார்த்திக், மீண்டும் அதே இயக்குநரின் இயக்கத்தில் நடித்துள்ள மற்றொரு ஆபாச படம் தான் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்தப் படம் மே 4-ஆம் தேதி வெளியாகிறது.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை அடுத்து கவுதம் கார்த்திக் நடித்துள்ள படம் – ‘மிஸ்டர் சந்திரமௌலி’. இந்தப்படம் மே 25-ஆம் தேதியும் வெளியாகவிருக்கிறது.
இந்த படங்களை தொடர்ந்து கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘கொடிவீரன்’ ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இந்தப்படத்தை இயக்குகிறார்.
‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். சசிகுமார், கார்த்தி, விஷால் ஆகியோரை தொடர்ந்து இந்த படத்தின் மூலம் கவுதம் கார்த்திகை இயக்க இருக்கிறார் முத்தையா.
இந்த படமும் முத்தையா இதற்கு முன் இயக்கிய படங்களைப் போல் சாதிப்பெருமையை தூக்கிப்பிடிக்கும் கிராமத்து பின்னணியில் நடக்கும் கதை என்று கூறப்படுகிறது.



Leave A Comment
You must be logged in to post a comment.