ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. தனுஷ் தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு மே 9-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் சிங்கிள் டிராக் பாடலான செம்ம வெயிட் பாடல் நேற்று இரவு 7-மணிக்கு வெளியானது.

 

வெளியிடப்பட்ட 24மணிநேரத்தில் செம்ம வெயிட் பாடலை 14 லட்சத்திற்கும் அதிகமான பேர் பார்த்துள்ளனர். 68 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

செம்ம வெயிட் பாடலுக்கு நல்ல வரவேற்பும், விமர்சனங்களும் இருந்த போதும், யூ-டியூப்பில் இந்தப்பாடல் தொடர்ந்து டிரெண்ட்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறது.

காலா படம் ஜூன் 7-ம் தேதி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸாகிறது.