ராம்சரணுடன் சமந்தா நடித்து வெளியான ரங்கஸ்தலம் வெற்றி பெற்றதோடு, சமந்தாவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. குறிப்பாக கிராமத்து பெண்ணாக அவர் மாறியிருந்ததை குறிப்பிட்டு பல சினிமா பிரபலங்களும் அவரது நடிப்பு புகழ்ந்து தள்ளியிருந்தனர்.

இந்தநிலையில், அடுத்தபடியாக நடிகையர் திலகம் படத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடித் துள்ளார் சமந்தா. இந்த படத்தின் கதையை விவரிக்கும் வேடத்தில் ஒரு நிருபராக அவர் தோன்றுகிறார். அதேசமயம், சமந்தாவுக்கு எமோசனல் காட்சிகள் அதிகமாகவே உள்ளதாம்.
ஆனால் அந்த காட்சிகளில் நடித்தபோது கிளிசரின் பயன்படுத்தாமல் ரியலாக அழுது நடித்துள்ளாராம் சமந்தா. அதோடு, இதுவரை தான் நடித்துள்ள படங்களில் இந்த படம் தனது இதயத்துக்கு நெருக்கமான படமாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் சமந்தா.



Leave A Comment
You must be logged in to post a comment.