ரிஷாவை தெரியாத தமிழ் ரசிகர்கள் இருக்க முடியாது. காரணம் 500 படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடித் தீர்த்துள்ளார். சிறுபட்ஜெட் படங்களில் ஓப்பனிங் பாடல், பார் பாடல், கிளைமாக்சுக்கு முந்தைய பாடல்களில் ரிஷாதான் மெயின் டான்சர்.

 

ஒரு சில படங்களில் சில கேரக்டர்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். சில படங்களில் அவர் ஹீரோயினாகவும் நடித்தார். ஆனால் அந்த படங்கள் பாதியிலேயே நின்று விட்டது. இந்த நிலையில் ரிஷா போத என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

பிப்டி பிப்டி பிலிம்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ஜி.வி.எஸ் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் விக்கி, வினோத், முன்னா, மிப்பு என்ற புதுமுகங்களுடன் ரிஷா நடித்துள்ளார், ரத்னகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார், புதுமுகம் சுரேஷ்.ஜி. இயக்கி உள்ளார். “எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு போதையில் மிதக்கிறார்கள். அதில் பணப்போதை மிகவும் கொடியது. அந்த போதை மனிதனை எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பதை சொல்லும் படம்” என்கிறார் சுரேஷ்.ஜி.