நாக் அஷ்வின் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொன்டா மற்றும் பலர் நடித்த ‘மகாநதி’ படம், கடந்த வாரம் 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இரண்டு நாட்கள் கழித்து ‘நடிகையர் திலகம்’ ஆக தமிழும் பேசியது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது போல வசூலும் கிடைத்து வருகிறது.

 

சுமார் 25 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், முதல் வார இறுதியிலேயே 28.7 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டும் 13 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அமெரிக்காவில் 11 கோடி, கர்நாடகாவில் 1.5 கோடி, தமிழ்நாட்டில் 1.2 கோடி, மற்ற மாநிலங்கள் நாடுகளில் 2 கோடி என 28.7 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் திரையிடும் உரிமை 20 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. பங்குத் தொகையாக இதுவரை 16 கோடி கிடைத்துள்ளது. அடுத்த சில நாட்களில் அது ‘ஓவர் ப்ளோ’வாக மாறிவிடும். மேலும் சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை என 25 கோடி ரூபாய்க்கும் மேல் இப்படம் மூலம் லாபம் கிடைக்கும் எனச் சொல்கிறார்கள்.