சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் விஸ்வாசம். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தில் நயன்தாரா, தம்பிராமைய்யா, யோகிபாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். தமிழ்த்திரையுலகில் நடைபெற்று வந்த வேலை நிறுத்தம் காரணமாக விஸ்வாசம் படப்பிடிப்பும் தாமதமானது.

 

இந்நிலையில், தற்போது விஸ்வாசம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து சென்னையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடைபெறுவதால் செட் போடும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

ஐதராபாத் படப்பிடிப்பை முடித்ததும் ஒரு சிறிய கேப் கொடுத்து விட்டு சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் அஜீத். சென்னையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை முடித்தும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக மும்பை செல்கிறார்கள்.

அங்கு கிளைமாக்ஸ் காட்சி உள்பட முக்கியமான பல காட்சிகள் படமாக்குவதோடு மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்று டைரக்டர் சிவா தெரிவித்துள்ளார். ஆக, ஏற்கனவே திட்டமிட்டபடி தீபாவளிக்கு விஸ்வாசத்தை திரைக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று அஜீத்தும், சிவாவும் முழுவீச்சில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.