நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநதி’ படத்தை சுமார் 25 கோடி ரூபாய் செலவில் தெலுங்கில் தயாரித்து வெளியிட்டனர். நடிகை சாவித்ரி பல நல்ல தமிழ்ப் படங்களில் நடித்தவர் என்பதால் அந்த தெலுங்குப் படத்தை தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டனர்.

தமிழில் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும், ஒரு டப்பிங் படம் என்பதால் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெறவில்லை. படத்தில் தமிழில் தயாரித்து வெளியிட்டிருந்தால் பெரிய வசூலையும் குவித்திருக்கும். தெலுங்கில் இப்படம் எதிர்பார்த்ததற்கும் மேலாக நல்ல வசூலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறதாம்.
இப்படத்தின் சாட்டிலைட் டிவி உரிமை மிகப் பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு தகவல் 18 கோடி விலை என்றும், மற்றொரு தகவல் 11 கோடி என்றும் தெரிவிக்கிறது. இரண்டுமே தவறாக இருந்தாலும் இந்தப் படத்திற்கு 10 கோடிக்கு மேல் கிடைக்கும் விலை மிகப் பெரிய விலை என்பது உண்மை. படத்தின் தயாரிப்புச் செலவே 25 கோடிதான். அதில் பாதியளவிற்கு சாட்டிலைட் உரிமை மூலம் கிடைத்துவிடும்.
டிஜிட்டல் உரிமை கூட சுமார் 5 கோடி வரை போக வாய்ப்புள்ளது என்கிறார்கள். தியேட்டர்கள் மூலம் ஏற்கெனவே 40 கோடி வசூல் கடந்திருக்கிறது. ஆக, அனைத்து வழிகளிலும் நல்ல வசூல் வருவதால் இந்தப் படம் தெலுங்கில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்துவிட்டது.



Leave A Comment
You must be logged in to post a comment.