கோவா, கோ போன்ற படங்களில் நடித்தவர், பியா பாஜ்பாய். தமிழில் மிகப் பெரிய இடத்துக்கு வருவார் என, கணிக்கப்பட்டவர். ஆனால், தொடர்ந்து படங்களில் நடித்தும், அவரால், முன்னணி இடத்துக்கு வரமுடியவில்லை.

 

‘ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் வகையிலான படங்களில் நடிக்காததால் தான், என்னால், முதல் வரிசைக்கு வர முடியவில்லை’ என, கூறி வந்தார். இந்நிலையில், பியாவின் ஏக்கத்தை தீர்க்கும் வகையில், அபியும், அனுவும் என்ற படம் திரைக்கு வருகிறது. இதில், பியா தான், கதையின் நாயகியாம்.

கேரக்டரின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தலையை மொட்டை அடித்தார் என்றால், பாருங்களேன். இதில், அவருக்கு ஜோடியாக, பிரபல மலையாள நடிகர், டொவினோ தாமஸ் நடித்துள்ளார். ‘இந்த படம் வெளியானதும், கவர்ச்சி பொம்மை என, என்னை யாரும் கூற முடியாது’ என, நம்பிக்கையுடன் கூறுகிறார், பியா.